அணுகல்தன்மை குறிப்பு

அறிமுகம்

டின்டரில், நாங்கள் உள்ளுணர்வு, உள்ளடக்கிய மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய வகையில் மக்களை ஒன்றிணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் ஒருங்கிணைக்கவும் உறுதிபூண்டுள்ளோம். அனைத்து வயது, இனம், பாலினம், பாலியல் சார்பு, பின்னணி, திறன்கள் மற்றும் உறவு இலக்குகளைச் சேர்ந்த மக்களை உள்ளடக்கிய உலகளாவிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்கு நாங்கள் பெருமையுடன் சேவை செய்கிறோம். அந்த உறுதிப்பாட்டை நாங்கள் பின்வரும் வழிகளில் வெளிப்படுத்துகிறோம்:

  • தொடர்ச்சியான அணுகல் பயிற்சி: சிறந்த அணுகல் நடைமுறைகள் குறித்த பயிற்சியை எங்கள் குழு பெறுகிறது, இது தற்போதைய தரநிலைகளுடன் உள்ளடக்கம் மற்றும் இணக்க அளவை மேம்படுத்துவதற்குத் தேவையான திறன்களை ஊழியர்கள் பெற்றிருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  

  • உலகளாவிய அணுகல் தரநிலைகளுக்கு இணங்குதல்: எங்கள் அனைத்து உறுப்பினர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய, W3C வலை உள்ளடக்க வழிகாட்டுதல்கள் 2.2 நிலை AA (WCAG 2.2 AA) மற்றும் ஐரோப்பிய ஒத்திசைவான தரநிலை EN 301 549 போன்ற நிறுவப்பட்ட அணுகல் தரநிலைகளுக்கு இணங்குவதை நோக்கமாகக் கொண்டு நாங்கள் உழைக்கிறோம்.

  • வழக்கமான சோதனை: WCAG 2.2 AA வழிகாட்டுதல்கள் போன்ற சமீபத்திய அணுகல் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப எங்கள் சேவைகளை நாங்கள் தொடர்ந்து சோதனை செய்து, அணுகலைத் தக்கவைக்கத் தேவையான புதுப்பிப்புகளைச் செய்கிறோம்.

  • கருத்து தெரிவிக்கும் வழிமுறைகள்: அணுகல் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து யூசர்கள் கருத்துகளை வழங்கவும், பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட சேனல்களை நாங்கள் நிறுவியுள்ளோம்.  

  • இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியதிருக்கிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்: தடைகள், சார்பு அல்லது விலக்கு இல்லாமல், எல்லா இடங்களிலும், எல்லோரும் இணைவதற்கும், சொந்தமாவதற்கும், அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதற்கும் வாய்ப்பைப் பெற உதவும் பணியைத் தொடர்ந்து செய்ய நாங்கள் உறுதியளிக்கிறோம்.

சேவை பற்றிய விளக்கம் மற்றும் அணுகலை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகள்

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நபருக்கும் அர்த்தமுள்ள இணைப்புகளை உருவாக்குவதை டின்டெர் நோக்கமாகக் கொண்டுள்ளது. பரந்த அளவிலான யூசர் தேவைகளை ஆதரிக்கும் விதத்தில் பல்வேறு வடிவங்களில் சேவையை அணுகுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோளாகும். அந்த இலக்கை மனதில் கொண்டு, பின்வருவனவற்றை உள்ளடக்கிய பல நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் முயற்சித்துள்ளோம்:

  • உரை அடிப்படையிலான விளக்கங்கள்: உரை அல்லாத, தகவல் சார்ந்த உள்ளடக்கம் மற்றும் எழுதப்பட்ட தகவல்களுக்கான மாற்றுகள் எளிய மொழியில் கிடைக்கின்றன.  

  • ஆடியோ ஆதரவு: பார்வைக் குறைபாடுகள் உள்ள யூசர்களுக்கான விரிவான விளக்கங்கள்.  

  • ஸ்கிரீன் ரீடர் வசதி: பிரபலமான ஸ்கிரீன் ரீடர்களைக் கொண்டு சேவைகள் செயல்படுகின்றன.  

  • மல்டிமீடியா மாற்றுகள்: பொருந்தக்கூடிய இடங்களில், காட்சி மற்றும் மல்டிமீடியா உள்ளடக்கத்துடன் தலைப்புகள்/வசனங்கள், டிரான்ஸ்கிரிப்ட்டுகள், ஆடியோ விளக்கங்கள் மற்றும் மாற்று உரை ஆகியவை இருக்கும்.  

  • போதுமான-மாறுபாடு மற்றும் ஜூம் செயல்பாடு: பார்வைக் குறைபாடுகள் உள்ள யூசர்களுக்குக் காட்சி அம்சங்கள் மற்றும் உரை அளவிடுதலுக்குப் போதுமான மாறுபாட்டை வழங்குகிறது.

அணுகலை ஆதரிக்கும் ஓர் இடைமுகம் மூலம் எங்கள் சேவை வழங்கப்படுகிறது:

  • எளிய வழிகாட்டுதல்: நிலையான தலைப்புகள், அடையாளங்கள் மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய நியாயமான அமைப்பு.

  • கீபோர்டு அணுகல்தன்மை: கீபோர்டு வழியாக இயக்கக்கூடிய செயல்பாடுகள்.  

  • உதவி மற்றும் ஆதரவு: தேவைப்பட்டால், அணுகக்கூடிய வடிவங்களில் வழிகாட்டிகள்.

  • தனிப்பயனாக்கக்கூடிய அமைப்புகள்: மொபைல் சாதன அமைப்புகள், கருப்பொருள்கள் மற்றும் காட்சி முறைகளுக்குள் உரை மறுஅளவிடுதலை ஆதரிப்பது போன்ற அமைப்புகளைத் தனிப்பயனாக்க யூசர்களுக்கு அதிகமான விருப்பங்கள் உள்ளன.  

பின்வருவனவற்றை வழங்குவதன் மூலம் எங்கள் அணுகலை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்: 

  • உணரக்கூடிய உள்ளடக்கம்: யூசர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய வழிகளில் பார்த்தல் மற்றும் கேட்டல் வடிவிலான தகவல்களை வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.  

  • இயக்கக்கூடிய இடைமுகம்: சேவைகள் கீபோர்டு மூலம் செயல்படக்கூடியதாகவும், உதவி தொழில்நுட்பங்களுடன் இணக்கமாகவும் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.  

  • புரிந்துகொள்ளக்கூடிய வடிவமைப்பு: எங்கள் இடைமுகம் தெளிவான மற்றும் எளிமையான மொழியைப் பயன்படுத்துகிறது, மேலும் தேவையற்ற சிக்கலைத் தவிர்க்கிறது.  

  • வலுவான உள்ளடக்கம்: தற்போதைய மற்றும் எதிர்கால யூசர் உதவி தொழில்நுட்பங்களின் இணக்கத்தன்மையை மனதில் கொண்டு வடிவமைத்து உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

வரம்புகளும் மாற்றுகளும்

அனைத்து யூசர்களுக்கும் அணுகக்கூடிய அனுபவத்தை வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டாலும், சில வரம்புகள் இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், அணுகல்தன்மை புதுப்பிப்பு உங்களுக்குக் கிடைக்க, நீங்கள் ஆப்ஸை ரீபூட் செய்ய வேண்டியதிருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட அளவைப் பெரிதாக்க அல்லது குறைக்க (பல விரல் பிஞ்ச் சைகைகளுக்கு மாற்றாக) ஒரு புகைப்படத்தை இருமுறை தட்டுங்கள். மேலும், உங்கள் இயக்க முறைமையில் உள்ள அனிமேஷன் விருப்பங்களை முடக்குவதன் மூலம் அனிமேஷன்களை நிறுத்தலாம். நீங்கள் ஏதேனும் பிரச்சனைகளைச் சந்தித்தால், எங்களிடம் தெரியப்படுத்துங்கள், மாற்றுத் தீர்வை வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.

கருத்துக்கணிப்பு மற்றும் தொடர்புத் தகவல்கள் 

எங்கள் சேவைகளின் அணுகல் குறித்த உங்களுடைய கருத்துக்களை வரவேற்கிறோம். நீங்கள் எந்தவொரு அணுகல் தடைகளையும் சந்தித்தால், எங்கள் உதவி மையம் அல்லது கீழே உள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும்:

அஞ்சல் முகவரி: 

நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி, ஐக்கிய ராஜ்ஜியம் அல்லது சுவிட்சர்லாந்தில் வசிக்கிறீர்கள் எனில்: 

MTCH Technology Services Limited 

டின்டெர்

10 ஏர்ல்ஸ்ஃபோர்ட் டெரஸ்

டப்ளின் 2, D01 T380 அயர்லாந்து 


நீங்கள் வேறு எங்காவது வசிக்கிறீர்கள் என்றால்: 

டின்டெர் LLC 

அஞ்சல் பெட்டி எண் 25472

டல்லாஸ், டெக்சாஸ், 75225