வழிகாட்டி

எப்படிக் கையாளுவது

நீங்கள் எதையாவது பார்த்தால், ஏதாவது சொல்லுங்கள்.


ஒருவர் எப்போது எல்லையைத் தாண்டினார் என்பதை நீங்கள் அறிவீர்கள் மற்றும் அவர்கள் அப்படி செய்தால் — அதைப் பற்றி எங்களுக்கு தெரிய வேண்டும், ஏனென்றால் புதிய நபர்களைச் சந்திக்க ஒரு பாதுகாப்பான வழியாக டின்டெரை உருவாக்குவதற்கு நாங்கள் உதவ விரும்புகிறோம்: உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற அல்லது எங்கள் வழிகாட்டுதல்களை மீறுகின்ற ஒருவரைப் பற்றி, கடுமையான குற்றம் புரிந்தவர் பற்றி, பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் இருந்தவர் பற்றி அல்லது உங்களது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து இதற்கு முன் அத்தகைய நடத்தைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் மூலம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயங்கள் பற்றி செயலியில் நீங்கள் புகாரளிக்க முடியும். ஒருவர் முறையாக நடந்து கொள்ளவில்லை என்று எங்களிடம் தெரிவிப்பது ஒரு எளிய வழி மற்றும் இது இரகசியமானது.

உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். தொல்லை கொடுத்தலை நாங்கள் மிகவும் தீவிரமானதாக எடுத்துக்கொள்கிறோம், மற்றும் வெளிப்படையாகச் சொல்வதென்றால், டின்டெரில் அத்தகைய சம்பவம் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் மக்களை ஏன் தடை செய்கிறோம் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் இங்கே:

  • இனம் சார்ந்த அவதூறுகள் அல்லது இழிவான பேச்சுக்கள்

  • செயலியிலும் அதன் வெளியிலும் ஒருவருக்கு அச்சுறுத்தலான அல்லது புண்படுத்தும் செய்திகளை அனுப்புதல்

  • செயலியின் உள்ளே அல்லது வெளியே உங்கள் இணைகளுக்கு தொல்லை கொடுத்தல்

  • உங்கள் இணையின் ஒப்புதல் இல்லாமல் செயலியிலும் அதற்கு வெளியிலும் வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தை அனுப்புதல்

  • வணிக வலைத்தளங்களுக்கான இணைப்புகள் உட்பட ஸ்பேம் அல்லது வேண்டுகோளை அனுப்புதல் அல்லது தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்க முயற்சிப்பது