கருவிகள்

எப்படி புகாரளிப்பது

ஒருவரைப் பற்றி செயலியில் புகாரளிக்க பல்வேறு வழிகள் உள்ளன.


இணை சேர்வதற்கு முன் புகாரளித்தல்

சாத்தியமுள்ள இணைகளின் புதிய சுயவிவரங்களைப் பார்க்கும்போது…

  1. அந்த நபரின் சுயவிவரத்தை திறக்கவும்

  2. நீள்வட்ட ஐகானைத் தட்டவும்

  3. புகாரளிப்பதற்கான தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்.

Howto Report Prematch

இணை சேர்ந்ததற்குப் பின் புகாரளித்தல்

உங்கள் இணை பட்டியலில்…

  1. செய்தி திரையைத் திறக்கவும்

  2. நீள்வட்ட ஐகான் அல்லது ஷீல்டு ஐகானை தட்டவும்

  3. புகாரளிப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்

Howto Report Postmatch

ஆஃப்லைன் நடத்தைப் பற்றி புகாரளித்தல்

ஆஃப்லைனில் நடந்த ஒரு விஷயம் பற்றி நீங்கள் புகாரளிக்க விரும்பினால்: தயவுசெய்து எங்களுக்கு எழுதவும் மற்றும் பின்வரும் தகவல்களைச் சேர்க்கவும்:

  • புகாருக்கான காரணம்

  • சரியான பெயர், வயது, பயோ மற்றும் நீங்கள் புகாரளிக்கும் சுயவிவரத்தில் காணப்படுகின்ற புகைப்படங்கள் (ஸ்கிரீன்ஷாட்கள் இருந்தால் நல்லது)

  • அந்த நபரின் இருப்பிடம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மற்றும்/அல்லது அவர்களுடைய ஃபேஸ்புக் கணக்கிற்கான இணைப்பு ஆகியவை உதவக்கூடிய பிற தகவல்கள் ஆகும்.

நாங்கள் அறிக்கைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். நீங்கள் எவ்வளவு கூடுதல் விவரங்களை வழங்குகிறீர்களோ, அவ்வளவு விரைவாக சுயவிவரம் அல்லது கேள்விக்குரிய நபரை நாங்கள் கண்டறிந்து விசாரிக்க முடியும்.

நீங்கள் இணை சேராத அல்லது உங்களிடம் இணை சேராத ஒருவரை புகாரளித்தல்

உங்கள் செய்தி திரையில் உங்கள் இணை தோன்றாவிட்டாலும், நீங்கள் அவர்களை ஆன்லைனில் புகாரளிக்கலாம். எங்கள் குழு அதை ஆராய்ந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முடிவெடுப்போம்.

எதைப் பற்றி புகாரளிக்க வேண்டும்

எங்கள் சமுதாயத்தின் பாதுகாப்பை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் - மற்றும் புதிய நபர்களைச் சந்தித்து மகிழ்ச்சியாக இருக்க ஒரு சிறந்த இடமாக டின்டெரை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம். டின்டெரில் முரட்டுத்தனமாக, தேவையற்ற அல்லது அச்ச உணர்வு விளைவிப்பவராக இருக்கும் ஒருவரிடம் நீங்கள் உரையாடினால், தயவுசெய்து எங்களிடம் தெரியப்படுத்துங்கள். நாங்கள் எதை அனுமதிக்கிறோம் மற்றும் எதை அனுமதிப்பதில்லை என்பதை நினைவுபடுத்திக்கொள்ள, எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் படிக்கவும்.