அடிப்படைகள்்
டின்டெர் மற்றும் நிஜ வாழ்க்கையில் பாதுகாப்பாக இருக்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது — அனைத்தும் ஒரே இடத்தில்.
டின்டெர் மற்றும் நிஜ வாழ்க்கையில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க உங்களுக்கு உதவுவதற்கு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களின் பட்டியல் ஒன்றை உருவாக்கி அவை அனைத்தையும் ஒரே இடத்தில் இடம்பெறச் செய்துள்ளோம் உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தால் அல்லது ஏதாவது உதவிக்குறிப்புகள் தேவைப்பட்டால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதைப் பார்த்துக்கொள்ளலாம்.
ஆன்லைன்
- உங்கள் முகவரி, SSN அல்லது நிதி தகவல் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் உங்கள் டின்டெர் இணையிடம் தெரிவிக்க வேண்டாம்.
- உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுக்க வேண்டாம்.
- செயலியின் உரையாடல்களை வேறொரு தளத்திற்கு நகர்த்துவதற்கு உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
- அனைத்து சந்தேகத்திற்குரிய மற்றும் பொருத்தமற்ற நடத்தைகளைப் பற்றி உடனடியாக புகாரளிக்கவும். உதாரணமாக:
- பணத்திற்கான கோரிக்கைகள்
- தொல்லை கொடுத்தல் அல்லது அச்சுறுத்தல்கள்
- நேரில் சந்திக்கும்போது அல்லது சந்தித்த பிறகு ஏற்படும் தீங்கு விளைவிக்கும் நடத்தை
- 18 வயதுக்குட்பட்ட உறுப்பினர்கள்
- ஸ்பேம்
- ஏதேனும் நிர்வாணமான அல்லது பாலியல் படங்களுக்கான வேண்டப்படாத கோரிக்கைகள் - இவை உங்களைப் பற்றியதாகவோ அல்லது வேறொருவரைப் பற்றியதாகவோ இருக்கலாம்
நிஜ வாழ்க்கை
* சந்திப்பதும் தங்குவதும் பொது இடத்தில் இருக்கட்டும்.
* உங்கள் போக்குவரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.
* நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நெருக்கமாக இருப்பவரிடம் தெரியப்படுத்தவும்.
* அசௌகரியமாக உணர்ந்தால், வெளியேறிவிடவும்.