கருவிகள்

தனியுரிமை அமைப்புகள்

இந்த தனியுரிமை அம்சங்கள் மற்றும் அமைப்புகளுடன் உங்கள் அனுபவத்தை தனிப்பயனாக்குங்கள்.

டின்டெர் தனியுரிமை அமைப்புகள்

உங்கள் கணக்கை எப்படி மறைப்பது

டின்டெரில் என்னைக் காண்பி என்ற அம்சத்தின் நிலையை மாற்றினால், கார்டு ஸ்டேக்கில் இருந்து நீங்கள் நீக்கப்படுவீர்கள். அப்படியிருந்தும் உங்கள் இணைகளைப் பார்க்கவும் அவர்களுடன் நீங்கள் சாட் செய்யவும் முடியும்.


வாசித்ததற்கான அறிவிப்பை அணைக்கவும்

இந்த அம்சத்தை ஆஃப் செய்வதன் மூலம், இந்த தருணத்திலிருந்து உங்கள் உரையாடலில் எந்தவொரு இணையும் வாசித்ததற்கான அறிவிப்புகளை செயல்படுத்த முடியாது.


சிறந்த பிக்ஸில் இருந்து கணக்கை மறைக்கவும்

இதை ஆன் செய்வதன் மூலம் உங்களுக்கு அருகிலுள்ள மற்ற உறுப்பினர்களுக்கான சிறந்த பிக்குகளில் நீங்கள் காட்டப்படுவதை அனுமதிக்கும்.


ஸ்வைப் சர்ஜில் இருந்து கணக்கை மறைக்கவும்

இதை ஆஃப் செய்வதன் மூலம், ஸ்வைப் சர்ஜில் உங்கள் சுயவிவரத்தை முன்னுரிமைப்படுத்துவதிலிருந்து தடுக்கும்.


டின்டெர் பிளஸ் தனியுரிமை அம்சங்கள்

உங்களிடம் ஒரு சந்தா இருந்தால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல தனியுரிமை அம்சங்கள் உள்ளன.

டின்டெர் ப்ளஸ் தனியுரிமை அமைப்புகள்

என் வயதைக் காட்ட வேண்டாம்

உங்கள் சுயவிவரத்திலிருந்து உங்கள் வயதை மறைக்க இந்த இருநிலை மாற்று அமைப்பை அழுத்தவும்.


எனது தூரத்தைக் காட்ட வேண்டாம்

உங்கள் சுயவிவரத்திலிருந்து உங்கள் தொலைவை மறைக்க இந்த அமைப்பை மாற்றவும்.


உங்களை யார் காண முடியும் என்பதை கட்டுப்படுத்துக

நீங்கள் ஏற்கனவே லைக் செய்துள்ள நபர்களுக்கு மட்டும் காண்பிக்கப்பட, நான் லைக் செய்துள்ள நபர்கள் மட்டும் என்பதற்கு மாற்றவும். நீங்கள் இந்த அம்சத்தைச் செயல்படுத்தினால், நீங்கள் ஒரு கோல்டு சந்தாதாரராக இருந்தால் லைக்ஸ் யூ வாயிலாக சாத்தியமுள்ள இணைகள் எதையும் நீங்கள் பார்க்க முடியாது.