கருவிகள்

எப்படி இணை நீக்குவது

உங்களுக்கு ஆர்வமில்லை என்றோ அல்லது உங்கள் இணை முறையின்றிச் செயல்படுகின்றார் என்றோ உங்களுக்குத் தெரியவரும்போது, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவரை இணை நீக்க முடியும்.


நீங்கள் ஒருவருடன் சாட் செய்துக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு அதில் ஆர்வமில்லை என்பதை உணர்ந்தாலோ அல்லது அந்த நபர் முறையின்றிச் செயல்படத் தொடங்கினாலோ, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களை இணை நீக்கலாம். நீங்கள் ஒருவரை இணைநீக்கும்போது, அவர்களுடைய இணை பட்டியலிலிருந்து நீங்களும் உங்களுடைய இணை பட்டியலிலிருந்து அவரும் மறைந்துவிடுவீர்கள், மற்றும் அவர்கள் உங்களைப் பார்க்க முடியாது அல்லது மேற்கொண்டு செய்தி அனுப்ப முடியாது.

டின்டெர் செயலியில் இணை சேராமல் இருத்தல்

ஒருவரை இணை நீக்குவதற்கு

அந்த நபருடனான சாட்டைத் திறக்கவும் > மேல்பக்க வலது மூலையில் உள்ள ஷீல்டு ஐகான் (ஐ.ஓ.எஸ்) அல்லது நீள்வட்ட ஐகானைத் (ஆண்ட்ராய்டு) தட்டவும் > இணை நீக்கவும்.

நீங்கள் அந்த நபரைப் பற்றி புகாரளிக்க விரும்பினால், எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுவிற்கு ஒரு புகாரை உருவாக்க இணை நீக்குவதற்கான ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் ஒருவருடன் இணை சேரவில்லை என்றாலும், எந்த நேரத்திலும் இங்கே அவர்கள் சுயவிவரத்தை ஆன்லைனில் புகாரளிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.