கருவிகள்

எங்கள் நீல நிற சரிபார்ப்பு குறி செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும். ஒரு சுயவிவரம் சரிபார்க்கப்பட்டால், யாரோ ஒருவர் தாங்கள் யார் என்பதை நிரூபிக்க நேரத்தையும் சக்தியையும் எடுத்துக் கொண்டார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே: ஒரு உறுப்பினர் காட்டப்படும் போஸ்களைப் பிரதிபலிக்கும் வகையில் 2 செல்ஃபிகளை எடுக்கிறார். இதை அடுத்து சூப்பர் கூல் ஏ.ஐ. செயல்பாட்டின் மூலம் புகைப்படங்களின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படும். படங்கள் பொருந்துவதை நாங்கள் உறுதிசெய்ததும், சுயவிவரத்தில் நீல நிறச் சரிபார்ப்பு குறியைச் சேர்ப்போம், புகைப்படங்களில் உள்ளவர் தான் ஸ்வைப் செய்து செய்தி அனுப்புகிறார் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.

நாங்கள் எவ்வளவு சுயவிவரங்களைச் சரிபார்க்கிறோமோ, அந்த அளவிற்கு நமது சமூகம் பாதுகாப்பானதாக மாறும். எனவே, உங்கள் சுயவிவரத்தில் நீல நிற சரிபார்ப்பு குறி இல்லை என்றால், உங்கள் அமைப்புகளுக்குச் சென்று, உங்கள் பெயருக்கு அடுத்ததாக உள்ளதை தட்டவும்.