பாதுகாப்புக் குறிப்புகள்

புதிய நபர்களைச் சந்திப்பது சுவாரசியமாக இருக்கும், ஆனால் உங்களுக்குத் தெரியாத ஒருவருடன் பழகும்போது நீங்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் முதல் செய்தியை அனுப்பினாலும் அல்லது நேரில் சந்தித்தாலும் உங்கள் உள்ளுணர்வைப் பயன்படுத்துங்கள் மற்றும் உங்கள் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுங்கள். மற்றவர்களின் செயல்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், நீங்கள் Tinder-ஐப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாக இருப்பதற்கு உதவும் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் உள்ளன.

ஆன்லைன் பாதுகாப்பு

  • பணத்தை அனுப்பவோ நிதித் தகவலைப் பகிரவோ கூடாது
    அவசரநிலையில் இருப்பதாகக் கூறினால் கூட, உங்கள் வயர் டிரான்ஸ்ஃபர், வங்கிச் சேவை அல்லது உங்கள் மொபைல் ஃபோனிலுள்ள ஆப் மூலம் பணத்தை அனுப்ப வேண்டாம். இந்தப் பரிவர்த்தனைகளை மாற்றுவது அல்லது பணம் எங்கு சென்றது என்பதைக் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. நீங்கள் இணை சேர்ந்த ஒருவருடன் அல்லது அவர்கள் பரிந்துரைக்கும் சேவைகள் அல்லது இணையதளங்கள் மூலம் முதலீடுகளைச் செய்யவோ கணக்குகளைத் திறக்கவோ வேண்டாம். உங்கள் நிதிக் கணக்குகளை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் தகவலைப் பகிர வேண்டாம். வேறொரு யூசர் உங்களிடம் பணம் கேட்டால், உடனடியாக எங்களிடம் புகாரளிக்கவும். காதல் மோசடிகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளுக்கு, அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷனின் சில ஆலோசனைகளைப் பார்க்கவும்.

  • உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்கவும்
    உங்கள் சமூகப் பாதுகாப்பு எண், வீடு அல்லது பணியிட முகவரி அல்லது உங்கள் தினசரி விவரங்கள் (உதாரணமாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஜிம் செல்வது) போன்ற தனிப்பட்ட தகவலை உங்களுக்குத் தெரியாதவர்களுடன் பகிர வேண்டாம். நீங்கள் பெற்றோராக இருந்தால், ஆரம்ப உரையாடல்களின்போது உங்கள் ப்ரொஃபைலில் உங்கள் குழந்தைகளைப் பற்றி நீங்கள் பகிரும் தகவலைக் குறைத்துக் கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் படங்கள், அவர்களின் பெயர்கள், அவர்கள் பள்ளிக்குச் செல்லும் இடம் அல்லது அவர்களின் வயது அல்லது பாலினம் போன்ற விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.

  • பிளாட்ஃபார்மில் இருங்கள்
    நீங்கள் யாரையாவது தெரிந்துகொள்ளும்போது Tinder-இல் உரையாடல்களை மேற்கொள்ளுங்கள். Tinder-இல் உள்ள பரிமாற்றங்கள் எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் கண்டறிதல்களுக்கு உட்பட்டவை என்பதால், தவறான நோக்கங்களைக் கொண்ட யூசர்கள் உரையாடலை டெக்ஸ்ட், மெசேஜிங் ஆப்ஸ், மின்னஞ்சல் அல்லது தொலைபேசிக்கு உடனடியாக நகர்த்த முயற்சிப்பார்கள்.

  • தொலைதூர மற்றும் வெளிநாட்டு உறவுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
    உங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு வேறு எங்காவது சிக்கியிருக்கும் மோசடி செய்பவர்களிடம் கவனமாக இருங்கள், குறிப்பாக அவர்கள் வீடு திரும்ப நிதி உதவி கேட்க வாய்ப்புள்ளது. அவர்கள் பகிரும் சேவை அல்லது இணையதளத்தில் முதலீடு செய்வது அல்லது கணக்கைத் திறப்பது பற்றி பேச இணையை அனுமதிக்காதீர்கள். நேரில் சந்திக்கவோ ஃபோன்/வீடியோ அழைப்பில் பேசவோ விரும்பாதவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்—அவர்கள் கூறுபவர்கள் போல் அவர்கள் இல்லாமல் இருக்கலாம். யாராவது உங்கள் கேள்விகளைத் தவிர்த்தாலோ உங்களை முதலில் சந்திக்காமல் அல்லது உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் ஒரு தீவிர உறவுக்கு வற்புறுத்தினால், அது ஒரு சிவப்புக் கொடி.

  • சந்தேகத்திற்கிடமான மற்றும் புண்படுத்தும் அனைத்து நடத்தைகளையும் புகாரளிக்கவும்
    யாரோ ஒருவர் எல்லை மீறும்போது உங்களுக்குத் தெரியும். அவர்கள் அதைச் செய்யும்போது, நாங்கள் அதைப் பற்றி அறிய விரும்புகிறோம். எங்கள் விதிமுறைகள் அல்லது உங்கள் தனிப்பட்ட எல்லைகளை மீறும் எவரையும் ப்ளாக் செய்து புகாரளிக்கவும். மீறல்களுக்கான சில எடுத்துக்காட்டுகள் இதோ:

    • பணம் அல்லது நன்கொடைகளுக்கான கோரிக்கைகள்

    • குறைந்த வயதுள்ள யூசர்கள்

    • துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான செய்திகள்

    • நேரில் சந்திக்கும்போது அல்லது அதற்குப் பிறகு பொருத்தமில்லாத அல்லது தீங்கு விளைவிக்கும் நடத்தை

    • மோசடியான ப்ரொஃபைல்கள்

    • வணிக வலைத்தளங்களுக்கான இணைப்புகள் அல்லது தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்கும் முயற்சிகள் போன்ற ஸ்பேம் அல்லது வேண்டுகோள்

எந்தவொரு ப்ரொஃபைல் பக்கம் அல்லது மெசேஜிங் விண்டோவிலும் சந்தேகத்திற்கிடமான நடத்தை பற்றிய ஏதேனும் கவலைகளை நீங்கள் புகாரளிக்கலாம். மேலும் தகவலுக்கு, எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பாருங்கள்.

நேரில் சந்தித்தல்

  • அவசரப்பட வேண்டாம்
    Tinder-க்குப் புறம்பாகச் சந்திக்க அல்லது சாட் செய்ய ஒப்புக்கொள்வதற்கு முன், உங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு மற்றவரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். சிவப்புக் கொடிகள் அல்லது தனிப்பட்ட தடங்கல்களை அறிந்துகொள்வதற்கு கேள்விகளைக் கேட்க பயப்பட வேண்டாம். சந்திப்பிற்கு முன் ஃபோன் அல்லது வீடியோ அழைப்பானது அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும்.

  • பொது இடத்தில் சந்தித்து பொது இடத்திலேயே இருங்கள்
    மக்கள் நிறைந்த, பொது இடத்தில் சந்திக்கவும் — உங்கள் வீட்டிலோ, உங்கள் டேட்டின் வீட்டிலோ வேறு எந்தத் தனிப்பட்ட இடத்திலோ சந்திக்க வேண்டாம். தனிப்பட்ட இடத்திற்குச் செல்லும்படி உங்கள் டேட் கட்டாயப்படுத்தினால், டேட்டை முடித்துக்கொள்ளுங்கள்.

  • உங்கள் திட்டங்களைப் பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்துங்கள்
    நீங்கள் எப்போது, எங்கு செல்கிறீர்கள் என்பது உட்பட உங்கள் திட்டங்களைப் பற்றி நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் கூறுங்கள். உங்கள் செல்போனைச் சார்ஜ் செய்து எல்லா நேரங்களிலும் உங்களுடன் வைத்திருங்கள். நீங்கள் ஒரு டேட்டுக்குச் செல்லும்போது, நீங்கள் நம்பும் ஒருவருடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிரும் வகையில், உங்கள் மொபைலின் உள்ளமைந்த அம்சங்களைப் பயன்படுத்தவும்.

  • உங்கள் போக்குவரத்தின் முறையில் கவனமாக இருங்கள்
    உங்கள் டேட்டிடம் நீங்கள் எப்படி வருகிறீர்கள் என்பதை நீங்கள் சொல்லாமல் தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், இதன் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். நீங்களே வாகனம் ஓட்டுவதை விட, வாடகை வண்டியோ உங்களை அழைத்துச் செல்ல ஒரு நண்பரையோ ஏற்பாடு செய்வது நல்லது.

  • உங்கள் வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள்
    போதைப்பொருள்கள் அல்லது மதுவின் விளைவுகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் — அவை உங்கள் தீர்ப்பையும் உங்கள் விழிப்புணர்வையும் பாதிக்கலாம். உங்கள் டேட் போதைப்பொருளைப் பயன்படுத்த அல்லது உங்கள் அளவுக்கு மீறி அதிகமாகக் குடிக்கும்படி உங்களை வற்புறுத்த முயற்சித்தால், உறுதியாக இருந்து டேட்டை முடித்துக் கொள்ளவும்.

  • பானங்கள் அல்லது தனிப்பட்ட பொருட்களைக் கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள்
    உங்கள் பானம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் மற்றும் அது எங்குள்ளது என்பதை எப்போதும் தெரிந்து கொள்ளுங்கள்— பார்டெண்டர் அல்லது சர்வர் நேரடியாக ஊற்றித்தரும் அல்லது பரிமாறும் பானங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளுங்கள். பாலியல் துன்புறுத்தலை எளிதாக்குவதற்காக பானங்களில் கலக்கப்படும் பல பொருட்கள் மணம், நிறம் மற்றும் சுவையற்றவையாக இருக்கும். மேலும், உங்கள் தொலைபேசி, பர்ஸ், வாலட் மற்றும் தனிப்பட்ட தகவலைக் கொண்ட எதையும் எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள்.

  • நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால்,
    உடனடியாக அங்கிருந்து வெளியேறவும்
    நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால், டேட்டை முன்கூட்டியே முடித்துக் கொள்வது பரவாயில்லை. உண்மையில், நாங்கள் இதை ஊக்குவிக்கிறோம். ஏதோ தவறாக உள்ளது என்று உங்கள் உள்ளுணர்வு சொன்னால் அல்லது நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், பார்டெண்டர் அல்லது சர்வரிடம் உதவி கேட்கவும்.

  • LGBTQ+ பயணம்
    பயணத்தின்போது கவனமாக இருங்கள். அனைத்துப் பாலின அடையாளங்கள் மற்றும் பாலியல் நோக்குநிலைகளின் உள்ளடக்கத்தை நாங்கள் நம்புகிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமான உண்மை இதுதான்: உலகில் எங்கும் ஆபத்து இல்லாமல் இல்லை. சில நாடுகளில் LGBTQ+ நபர்களைக் குறிவைக்கும் குறிப்பிட்ட சட்டங்கள் உள்ளன. ஒரு புதிய இடத்திற்குப் பயணிக்கும்போது உள்ளூர் சட்டங்களை மதிப்பாய்வு செய்து, பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் உங்களுக்கு என்ன வகையான சட்டப் பாதுகாப்புகள் உள்ளன என்பதை ஆராயுங்கள். நீங்கள் பாதுகாப்பற்ற பிரதேசத்தில் இருந்தால், அமைப்புகள் பக்கத்தின் கீழ் நீங்கள் காணக்கூடிய “Tinder-இல் என்னைக் காட்டு” என்பதை மாற்றுமாறு பரிந்துரைக்கிறோம். உங்கள் ப்ரொஃபைலில் பாலியல் நோக்குநிலையைச் சேர்த்திருந்தாலோ, LGBTQ+ நபர்களுக்குப் பாதுகாப்பற்றது என நாங்கள் கண்டறிந்த பிரதேசத்தில் நீங்கள் இருந்தாலோ, நீங்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறும் வரை உங்கள் ப்ரொஃபைலில் இருந்து உங்கள் பாலியல் நோக்குநிலையை மறைப்போம். இந்த நாடுகளில் புதிய நபர்களுடன் தொடர்பு கொள்ள நீங்கள் தேர்வுசெய்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுவது முக்கியம் - சில சட்ட அமலாக்க அதிகாரிகள் டேட்டிங் பயன்பாடுகளைச் சாத்தியமான சிக்கலுக்கான கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர். சில நாடுகள் சமீபத்தில் சேம்-செக்ஸ் டேட்டிங் பயன்பாடுகள் அல்லது இணையதளங்கள் பற்றிய தகவல்தொடர்புகளைக் குற்றமாக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன, மேலும் அந்த உரையாடல்கள் பாலியல் ரீதியாக சென்றால் அபராதம் வழங்க வாய்ப்பு உள்ளது.
    நாடு வாரியாக சமீபத்திய பாலியல் நோக்குநிலைச் சட்டங்களைப் பார்ர்வையிட ILGA வேர்ல்டுக்குச் செல்லுங்கள், மேலும் அவர்களின் ஆராய்ச்சிக்கு ஆதரவாக நன்கொடை வழங்குவதைப் பற்றிச் சிந்தியுங்கள். ஆதாரம்: ILGA வேர்ல்ட், மார்ச் 2019 இல் புதுப்பிக்கப்பட்டது

பாலியல் நலம் & ஒப்புதல்

  • உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
    சரியாகவும் தொடர்ச்சியாகவும் பயன்படுத்தும்போது, ஆணுறைகள் HIV போன்ற பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்று பரவும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். ஆனால், ஹெர்பெஸ் அல்லது HPV போன்ற பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள், அவை தோலோடு தோல் தொடர்பு கொள்வதன் மூலம் பரவும். தடுப்பூசி மூலம் சில பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் ஆபத்தைக் குறைக்கலாம்.

  • உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள்
    அனைத்துப் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளைக் காட்டாது, மேலும் உங்கள் நிலையைப் பற்றித் தெரியாமல் இருக்க விரும்பவில்லை. தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்து, பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகளைப் பரவாமல் தடுக்கவும். உங்களுக்கு அருகிலுள்ள கிளினிக்கை இங்கே தேடவும் (அமெரிக்காவில் மட்டும்).

  • அதைப் பற்றிப் பேசுங்கள்
    தகவல் தொடர்புதான் அனைத்தும்: நீங்கள் ஒரு பார்ட்னருடன் உடல் ரீதியாக நெருங்கி பழகுவதற்கு முன், பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுச் சோதனை பற்றிப் பேசுங்கள். மற்றும் எச்சரிக்கையாக இருங்கள் —சில இடங்களில், தெரிந்தே ஒரு பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றைப் பரவ விடுவது உண்மையில் ஒரு குற்றமாகும். உரையாடலைத் தொடங்குவதற்கு உதவி வேண்டுமா? சில குறிப்புகள் இதோ.

  • ஒப்புதல்
    அனைத்துப் பாலியல் செயல்பாடுகளும் சம்மதத்துடன் தொடங்க வேண்டும் மற்றும் உங்கள் பார்ட்னருடன் தொடர்ந்து அணுகலை மேற்கொள்ள வேண்டும். வாய்மொழி கருத்துப் பரிமாற்றம் உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் எல்லைகளை மதிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த உதவும். எந்த நேரத்திலும் ஒப்புதல் திரும்பப் பெறப்படலாம், மேலும் செக்ஸ் வைத்துக் கொள்ள யாருக்கும் கடமைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பார்ட்னர் அசௌகரியமாகவோ குழப்பத்தில் இருந்தாலோ அல்லது உங்கள் பார்ட்னர் போதைப்பொருள் அல்லது மதுவின் தாக்கத்தின் காரணமாக சம்மதிக்க முடியாவிட்டாலோ நீங்கள் தொடர வேண்டாம். ஒப்புதல் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி மேலும் படிக்கவும்.