வழிகாட்டி

எதைப் பற்றி புகாரளிக்க வேண்டும்

டின்டெரில் ஒருவரைப் பற்றி நீங்கள் எப்போது புகாரளிக்க வேண்டும் மற்றும் எப்போது புகாரளிக்கக் கூடாது.


டின்டெரில் பாதுகாப்பு எங்களது பிரதான முன்னுரிமையாக உள்ளது, மற்றும் நீங்கள் காணும் ஏதேனும் சந்தேகத்திற்குரிய நடத்தை பற்றி எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அனைவருமே நல்ல எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பதில்லை. செயலியில் இடம்பெற்றுள்ள பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களில் ஒரு சில மோசமான நடிகர்களையும் நாங்கள் கையாள வேண்டியிருக்கிறது. எங்களது புகாரளிக்கும் செயல்முறையை இன்னும் பயனுள்ளதாக்க, டின்டெரில் ஒருவரைப் பற்றி நீங்கள் எப்போது புகாரளிக்க வேண்டும் மற்றும் எப்போது புகாரளிக்கக் கூடாது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

எங்கள் மாறுபட்ட, வண்ணமயமான சமூகம் மற்ற டேட்டிங் பயன்பாடுகளிலிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது - நாங்கள் அதை விரும்புகிறோம். நீங்கள் இங்கு இருக்கும்போது, வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட எல்லா விதமான மக்களுடனும் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பீர்கள். எல்லா இடங்களிலிருந்தும் வந்த மக்களைக் கொண்ட, நியூயார்க் போன்று 100 மடங்கு கொண்ட வளர்ந்து வரும் பெருநகரமாக எங்களை நினைத்துக் கொள்ளுங்கள். மற்றும் உங்களை உண்மையான நியூயார்க் நகரவாசிகளாக நினைத்துக்கொள்ளவும்: நீங்கள் எதையாவது பார்த்தால், ஏதாவது கூறுங்கள். நீங்கள் மற்ற பயனர்களை இதே போன்ற நடத்தையால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், எங்களுக்குப் புலப்படாத விஷயங்களை எங்களுக்குத் தெரிவிக்கும் காதுகளாகவும் கண்களாகவும் இருப்பீர்கள். எங்கள் சமூக வழிகாட்டுதல்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் பற்றிப் புகாரளிப்பதன் மூலம் நம் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுங்கள்.

மேலும் தாமதிக்காமல், புகாரளித்தல் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன்

நீங்கள் இணைகளை ஏற்படுத்தவே இங்கு வந்துள்ளீர்கள், பணத்திற்காக அல்ல, மற்றும் உங்கள் நிதித் தகவல்களை உங்களிடம் யாராவது கேட்டால், அதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் — மற்றும் எங்களிடமும் தெரியப்படுத்த வேண்டும். யாராவது தங்கள் சுயவிவரத்தில் தனிப்பட்ட தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்களா அல்லது உங்களுடைய தகவல்களைக் கேட்கிறார்களா என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

செயலியிலும் அதற்கு வெளியிலும் நடக்கும் தொல்லை கொடுத்தல் பற்றிப் புகாரளிக்கவும்.

தொல்லை கொடுத்தல் பற்றிய அனைத்துப் புகார்களையும் நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், எனவே நீங்களும் அப்படியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஆஃப்லைனில் செயல்படும்போது யாராவது உங்களுக்குத் தொல்லை கொடுத்தால் அது எங்களுக்குத் தெரியாது. யாராவது தொல்லை கொடுக்கும் செய்திகளை செயலியில் அல்லது அதற்கு வெளியே உங்களுக்கு அனுப்பினால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் அதிலிருந்து அவர்களை பார்த்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திக்கு பதிலளிக்காத நபர்களைப் பற்றி புகாரளிக்க வேண்டாம்.

சில நேரங்களில் நீங்கள் இணை சேர்ந்துள்ள ஒருவரிடம் இருந்து மீண்டும் செய்திகள் ஏதும் வராது, அப்படிப்பட்டவர்கள் முதலில் ஏன் உங்களுடன் இணை சேர்ந்தார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள் ஆர்வம் இழந்துவிட்டார்களா, தவறுதலாக இணை சேர்ந்தார்களா அல்லது தயக்கம் காட்டுகிறார்களா என்பதைப் பற்றி — உங்களுக்கு ஒருபோதும் தெரியாது. அவர்களைப் பற்றி புகாரளிப்பதற்குப் பதிலாக உங்கள் ஈகோவை மசாஜ் செய்து, புதிய இணைகளைக் கண்டறியவும்.

உங்கள் ஒப்புதல் இல்லாமல் அனுப்பப்பட்ட எந்தவொரு பாலியல் ரீதியான உள்ளடக்கத்தையும் புகாரளிக்கவும்.

செயலியில் உள்ள ஒரு செய்தி பொருத்தமற்றதாக இருப்பதாக நாங்கள் கருதும்போது அதில் குறுக்கிட எங்களால் இயன்றவற்றை நாங்கள் செய்கிறோம், ஆனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு எல்லைகளைக் கொண்டிருக்கின்றனர். உங்கள் ஒப்புதல் இல்லாமல் பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை உங்களுக்கு ஒருவர் அனுப்பினால், உங்கள் உரையாடல்களை செயலியின் வெளியே எடுத்து சென்றுவிட்டாலும் கூட அவர்களைப் பற்றி நீங்கள் எங்களிடம் புகாரளிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளவும். வேறு இடங்களில் எங்காவது அவர்கள் உங்களைத் தொடர்புகொண்டிருந்தால் அங்கும் அவர்களைத் இணை நீக்குவதையும், தடை செய்வதையும் உறுதிசெய்யவும்.

மக்களுடைய இனம், பாலினம், அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் மீது புகாரளிக்க வேண்டாம்.

உங்களது சாத்தியமுள்ள இணைகளின் பட்டியலில் உள்ள அனைவரும் உங்களைப் போன்றே தோற்றமளிக்க மாட்டார்கள் அல்லது ஒரே மாதிரியான நம்பிக்கைகளை கொண்டிருக்கப் போவதில்லை. ஒருவர் கருப்பாக, மாற்றுப் பாலினத்தவராக அல்லது இருபாலினத்தவராக இருப்பதால் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், என்னவென்று ஊகிக்க முடிகிறதா? அவரை கடந்து அடுத்த நபருக்குச் செல்ல இடதுபுறமாக ஸ்வைப் செய்க® அம்சத்தை நீங்கள் பயன்படுத்த முடியும். நபர்களுடைய அடையாளத்தின் அடிப்படையில் அவர்கள் மீது புகாரளிப்பதன் மூலம் நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம் என்னவெனில் நீங்கள் ஒருவித விரும்பத்தகாத நபர் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துவதாகும், நம்புங்கள்.