வழிகாட்டி

உங்கள் நிஜ வாழ்க்கை கையேடு

நிஜ வாழ்க்கையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதற்கான குறிப்புகள் (நீங்கள் இருக்க வேண்டாம் என்று நாங்கள் விரும்பினாலும்).


கெட்ட நோக்கங்களைக் கொண்டுள்ள சில பேர் உள்ள உலகில் நாம் வாழ்கிறோம். நிஜ வாழ்க்கையில் பாதுகாப்பாக இருக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அது அவ்வாறு இருக்கக்கூடாது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள விரும்புகிறோம்: நீங்கள் பாதுகாப்பாக இருக்க உங்கள் வழியை விட்டு வெளியேற வேண்டியதில்லை மற்றும் பாலினம், பாலின அடையாளம், இனம், மதம் மற்றும் பாலியல் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையில் சில பேர் மற்றவர்களை விட அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது முற்றிலும் நியாயமற்றது.

செயலிக்கு வெளியே ஏதாவது நிகழ்ந்தால், உங்கள் நினைவில்கொள்ள சில விஷயங்கள் இதோ — நீங்கள் பயன்படுத்தும் செய்திச் சேவையில் அவர்கள் தொடர்பு கொள்வதை நீங்கள் தடுக்க முடியும் மற்றும் அவர்களைப் பற்றி எங்களிடம் புகாரளிக்க முடியும். அவர்கள் உங்களோடு இணை சேராமல் விட்டாலும், நீங்கள் அவர்கள் மீது இங்கே புகாரளிக்கலாம் அதை நாங்கள் கவனித்து என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்போம்.

ஒன்றை தெளிவுப்படுத்திக்கொள்வோம்: அவர்கள் எவ்வளவு குடித்தார்கள் அல்லது யாரை நம்பி அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றாலும் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு யாரும் தகுதியற்றவர்கள். உங்களுக்கு எதிராக வன்முறைச் செயல் மேற்கொள்ள யாராவது முடிவெடுத்தால், அது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

மேற்கொண்டு தாமதிக்காமல், நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்று நாங்கள் விரும்பினாலும் கூட, நீங்கள் IRL-இல் பாதுகாப்பாக இருப்பதற்கான சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

ஒரு சந்திப்புக்கு முன்

  • செயலியை விட்டு வெளியேறவோ அல்லது உங்கள் தனிப்பட்ட தகவலைப் பகிரவோ அவசரப்பட வேண்டாம்: நீங்கள் சௌகர்யமாக இருக்கும்போது மட்டுமே உங்கள் எண்ணைக் கொடுங்கள், மேலும் புதியவர்களைத் தெரிந்துகொள்ளும் போது உங்கள் வீட்டு முகவரி மற்றும் தினசரி வழக்கம் போன்றவற்றை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
  • மக்களை வளையத்தில் வைத்திருங்கள்: உங்கள் திட்டங்களைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கவும் - உங்களைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு நம்பகமான ஒருவர் தெரிந்து வைத்திருப்பது சிறந்தது.
  • உங்கள் கட்டுப்பாட்டில் இருங்கள்: யாராவது உங்களை அழைத்துச் செல்ல முன்வந்தாலும், சந்திப்பிற்கு உங்கள் சொந்த போக்குவரத்தைக் கையாளவும்.
  • உங்களுக்குத் தெரியாத ஒருவரைச் சந்திக்கும் போது எப்போதும் பொது இடங்களைத் தேர்ந்தெடுக்கவும் (மற்றும் அங்கேயே இருக்கவும்).

ஒரு சந்திப்பின் போது

  • நீங்கள் போதைப்பொருள் அல்லது மது பயன்படுத்தினால், அவை உங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை குறிப்பாக அறிந்து கொள்ளுங்கள். துரதிருஷ்டவசமாக, அதைப் பயன்படுத்திக்கொள்ளும் நபர்கள் அங்கு இருக்கிறார்கள்.
  • உங்கள் உடைமைகளை நெருக்கமாக வைத்திருக்கவும்: பை, ஃபோன், சாவிகள், பணப்பை, பானம்? அனைத்தையும் உங்களிடம் வைத்துக்கொள்ளவும்.

ஒரு சந்திப்பிற்குப் பிறகு

  • உங்கள் கட்டுப்பாட்டில் இருங்கள்: உங்கள் சொந்த வாகனத்தில் வீட்டிற்குச் செல்லுங்கள்
  • ஒரு நல்ல அனுபவமாக இல்லையா? அவர்களை இணை நீக்கவும் - மற்றும் அவசியமானது என்று நீங்கள் கருதினால் அவர்களைப் பற்றி புகார் செய்யவும். கவலைகள் இல்லை.

கொரோனா வைரஸ் காலத்தில் டேட்டிங்:

நாங்கள் மீண்டும் நிஜ வாழ்க்கையில் இணைய ஆர்வமாக உள்ளோம், ஆனால் நம் சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நம் அனைவரின் கடமை. உங்கள் உள்ளூர் சுகாதார ஆணையம் சிறிய சமூகக் கூட்டங்களை அங்கீகரித்ததும் மற்றும் நீங்கள் பழகும் குழுவை விரிவுபடுத்த தயாராக இருப்பதாக உணர்ந்தால், உங்கள் உள்ளூர் சுகாதார ஆணையத்தின் ஆலோசனையைப் பின்பற்றவும் அல்லது உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும். அந்த நேரம் வரும்போது, ​​நீங்கள் எவற்றில் சௌகர்யமாக இருக்கிறீர்கள் - மற்றும் எவற்றில் இல்லை - என்பதைப் பற்றி வெளிப்படையாக இருங்கள் எல்லைகள் விதிப்பது மற்றும் உங்கள் இணைகளிடம் இந்த நேரத்தில் எவற்றுடன் நீங்கள் சௌகரியமாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக கூறுவது முக்கியம். நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் பாதுகாப்பு மற்றும் மன அமைதி எப்போதும் முதலில் வர வேண்டும். போகின்ற போக்கில் உதவ, நிஜ வாழ்க்கையில் டேட்டிங் செய்ய உதவும் குறிப்புகளை உருவாக்க, நாங்கள் பொது நலத்திற்கான மருத்துவ மையத்தின் தலைவர், பீட்டர் பிட்ஸ் அவர்களின் ஆலோசனையை கேட்டோம்.

  1. ஒரு ஹீரோவாக இருங்கள், முகக்கவசத்தை அணியுங்கள்: ஒவ்வொரு முறையும் புதிய நபரைச் சந்திக்கும் போது, உங்கள் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ள உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் மூலம், உங்களையும் உங்கள் சமூகத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள். நினைவில் கொள்ளுங்கள்: உங்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும் வைரஸ் பரவக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
  2. தொடுவதற்கு அவசரப்பட வேண்டாம்: மற்றவர்களின் உடல் நிலை அறியாமல் கை குலுக்கவோ, கட்டிப்பிடிக்கவோ அல்லது முத்தமிடவோ வேண்டாம் -- மற்றும் அவர்களின் நண்பர்களை சந்திக்கும் நேரம் வரும்போதும் இதே எச்சரிக்கையோடு பழகுங்கள். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் டிஜிட்டல் முறையில் இணைக்கவும்: இந்த வைரஸ் மனிதர்களை வித்தியாசமாக பாதிக்கிறது, அதனால் நீங்கள் 100% நன்றாக இல்லை என்றால், ஃபேஸ்டைம், ஸூம் அல்லது உங்களுக்கு பிடித்த வீடியோ தளம் மூலமாக டேட் செய்யவும். உங்களுக்கோ அல்லது மற்றவருக்கோ நோய்வாய்ப்படும் அபாயத்தைக் ஏற்கும் அளவிற்கு இது தகுதியானது அல்ல - நீங்கள் இன்னும் சில மெழுகுவர்த்திகளை ஏற்றலாம் அல்லது இரவு உணவை வழங்கலாம்.
  3. நீங்கள் டேட் செய்யும் இடத்தை பார்த்து தேர்ந்தெடுங்கள்: நேரில் சந்திப்பது உங்களுக்கு சௌகர்யமாக இருந்தால், பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கும் இடத்தை தேர்ந்தெடுங்கள். துடைப்பான்கள் மற்றும் கை சுத்திகரிப்பானை கொண்டு வந்து, நீங்கள் தொடக்கூடிய அல்லது உட்காரக்கூடிய எதையும் துடைக்கவும். மற்றும் உங்கள் கைகளை அடிக்கடி கழுவ மறந்து விடாதீர்கள்!

உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று தோன்றினால், உங்கள் உள்ளூர் சுகாதார ஆணையத்தின் வழிமுறைகளைப் பின்பற்றவும் மற்றும் நீங்கள் சந்தித்தவர்களுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தெரியப்படுத்தவும்.

மேலும் அதிகமான குறிப்புகளை எங்கள் இணையதளத்திலும் இங்கே காணலாம்.